மேச்சேரி அருகே ஊர்க்காவல் படைவீரர் விபத்தில் பலி போலீஸ்காரருக்கு காயம்

மேச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஊர்க்காவல் படைவீரர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம்

Update: 2021-06-28 22:00 GMT
மேச்சேரி
ஊர்க்காவல் படைவீரர்
மேச்சேரி அருகே குஞ்சாண்டியூர் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் கியான் (வயது 32). இவர் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். 
இவரும், மேச்சேரி அருகே புக்கம்பட்டி அழகாகவுண்டனூர் ஆசாரி தெருவை சேர்ந்தவரும், ஊர்க்காவல் படைவீரருமான அண்ணாமலை (28) என்பவரும் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
இதையொட்டி அவர்கள் இருவரும் மேட்டூர் சாலையில் மேச்சேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மனோஜ் கியான் ஓட்டினார். பின்னால் அண்ணாமலை உட்கார்ந்து வந்தார்.
லாரி மோதி பலி
எம்.காளிப்பட்டி ஏரி பகுதியில் உள்ள வேகத்தடை அருகே அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த அண்ணாமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதே நேரத்தில் படுகாயம் அடைந்த மனோஜ் கியான் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்