தென்காசியில் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கருஞ்சிறுத்தைகள் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் முருகேஷ் தலைமையில் கருப்புத்துணி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து அகதிகளாகி விடுவோம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.