குண்டாறு அணை, அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க போலீஸ் சோதனை சாவடி அமைப்பு
செங்கோட்டை குண்டாறு அணை, அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையை ஒட்டி அமைந்துள்ள பல அருவிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அருவிகளில் இருந்து விழும் தண்ணீரில் மருத்துவ குணம் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் குண்டாறு அணை மற்றும் அருவிகளில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் பெரும்பாலானோர் தடையை மீறி குளிக்க செல்கிறார்கள்.
இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அணைக்கு செல்லும் 2 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செங்கோட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.