கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லையில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-28 20:12 GMT
நெல்லை:
நெல்லை டவுனைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 30). இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வாத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த செந்தில்வேல் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்