இடப்பிரச்சினையில் இருதரப்பினரிடையே மோதல்; சிறுவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு

தா.பழூர் அருகே இடப்பிரச்சினையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-28 20:08 GMT
தா.பழூர்:

இருதரப்பினர் மோதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அர்த்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி(வயது 21). அதே கிராமத்தை சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் செல்வராஜ். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பாதை பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. பிரச்சினைக்கு உரிய இடத்தை பயன்படுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் சத்தியமூர்த்திக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு தா.பழூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல் சத்தியமூர்த்தி தரப்பு தாக்கியதில் செல்வராஜுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
5 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் (50), 14 வயது சிறுவன் ஆகியோர் மீதும், செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் சத்தியமூர்த்தி (21), தட்சிணாமூர்த்தி (53), 17 வயது சிறுவன் ஆகியோர் மீதும் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்