அம்பை:
பாளையங்கோட்டை அருகே புதுப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் மகன் ராம்குமார் (வயது 26). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது நண்பர்கள் அம்பை பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் அம்பை சின்ன சங்கரன்கோவில் தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி ராம்குமார் இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.