தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வள்ளியூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் ராஜ்குமார் 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 2-வது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் வள்ளியூர் சூட்டுபொத்தை கோவில் அருகில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.