கத்தியை காட்டி வாலிபரை மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி வாலிபரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-28 20:01 GMT
திருச்சி
மலைக்கோட்டை
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மகன் அமல கிளிண்டன் (வயது 19). இவர் நேற்று முன்தினம் திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள ஒரு டீக்கடையில் நின்றபோது அவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக மதுரை ரோடு கல்யாண சுந்தரபுரம் சீரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (21), அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன் (19) ஆகிய 2 பேரை கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் கைது செய்தார்.

மேலும் செய்திகள்