கே.செட்டிபாளையம் அரசு பள்ளி மாணவி தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி

கே.செட்டிபாளையம் அரசு பள்ளி மாணவி தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி

Update: 2021-06-28 19:06 GMT
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதில் திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட  கே.செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி சி.அஜிதா 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
 சாதனை படைத்த இந்த மாணவிக்கு அரசு ஊக்கத்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ரூ.48 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. சாதனை படைத்த மாணவி சி.அஜிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளத்துரை மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள்  பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்