விதைகள் வாங்க குவிந்த விவசாயிகள்

திருச்சுழி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் வாங்க ஒரே நேரத்தில் விவசாயிகள் திரண்டனர்.;

Update: 2021-06-28 19:06 GMT
காரியாபட்டி, 
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு மெல்ல குறையத்தொடங்கி உள்ளதால் தமிழகஅரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. 
இந்நிலையில் திருச்சுழி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தருவதாக விவசாயிகளுக்கு அறிவிப்பு வந்த நிலையில் நேற்று காலையில் இருந்து திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான  விவசாயிகள் ஒரேநேரத்தில் முண்டியடித்து கொண்டு வேளாண்மைதுறை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பகுதியில் விவசாயிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை அறிந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று பொதுமக்களை சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து நிற்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்