2 பேர் கைது

விருதுநகரில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-06-28 18:58 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 36). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (22), முத்துப்பாண்டி (44) ஆகியோருடன் சேர்ந்து கிராமத்துக்கு வெளியே உள்ள இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் பெரியசாமி, முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து வெள்ளைச்சாமியை தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் பெரியசாமி, மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்