பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-28 18:36 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை காவிரி ஆற்று பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மண்மங்கலம் சமத்துவபுரத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 28), நொய்யல் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.100 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்