தூசி கிராமத்தில் போலி டாக்டர் கைது
தூசி கிராமத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 54). இவர், மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதுகுறித்து வெம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் பாண்டியன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சங்கரலிங்கம், டிப்ளமோ பாரா மெடிக்கல் படித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போலி டாக்டர் சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.