50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் ஓடின
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் ஓட தொடங்கியது.அத்துடன் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளும் திறக்கப்பட்டன.
சிவகங்கை,
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் அரசு பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் ஓட தொடங்கியது.அத்துடன் ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளும் திறக்கப்பட்டன.
50 சதவீத பயணிகள்
இந்த நிலையில் நேற்று முதல் பஸ் போக்குவரத்தை 50 சதவீத பயணிகளுடன் தொடங்க அரசு அனுமதியளித்தது.அத்துடன் ஜவுளிகடைகள் மற்றும் நகை கடைகளை திறக்கவும் அனுமதியளித்தது.
பஸ்கள் ஓடின
இதில் காரைக்குடி பகுதியில் 24 நகர்புற பஸ்களும், 26 புறநகர் பஸ்களும், தேவகோட்டை பகுதியில் 25 நகர்ப்புற பஸ்களும், 30 புறநகர் பஸ்களும், திருப்பத்தூர் பகுதியில் 15 நகர்ப்புற பஸ்களும், 19 புறநகர் பஸ்களும், சிவகங்கை பகுதியில் 33 நகர்புற பஸ்களும், 27 புறநகர் பஸ்களும், மதுரையிலிருந்து 42 புறநகர் பஸ்களும் சேர்த்து மொத்தம் 241 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்பட்டனர்.அத்துடன் முககவசம் அணிந்த பயணிகளே பஸ்சுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் கைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் தனியார் பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை.திருப்புவனம் பணிமனையில் உள்ள 42 டவுன் பஸ்களில் 38 பஸ்கள் ஓடத் தொடங்கின. முன்னதாக பஸ்களுக்கு பணிமனையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு