ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் நயினார்கோவில் ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரின் கடையின் அருகில் குளத்தூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் இவர்கள் இருவரின் கடைகளை உடைத்து கடைக்குள் வைத்திருந்த தலா ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். நேற்று காலை கடையை திறக்க வந்த கண்ணன் மற்றும் பழனிசாமி ஆகியோர் பணம் திருட்டுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.