திப்பம்பட்டி சந்தையில் தெலுங்கானா மாநில மாடுகளை பாதுகாக்க அனுமதிக்க வேண்டும்

திப்பம்பட்டி சந்தையில் தெலுங்கானா மாநில மாடுகளை பாதுகாக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-06-28 18:11 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை சூப்பிரண்டு தமிழ்மணியிடம் நேற்று திப்பம்பட்டி மாட்டு வியாபாரிகள் சங்க தலைவர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி கிராமத்தில் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. கிராமத்தில் வாழும் சுமார் 500 குடும்பங்களும் மாட்டு வியாபாரம் செய்து வருகின்றோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கால் சந்தையை நடத்த கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்தது. 

அதை ஏற்று தற்போது வரை சந்தை நடைபெறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு இல்லாததால், அங்கிருந்து இருந்து தான் அதிகமாக மாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்து வரும் மாடுகளை சந்தையில் இறக்கி தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அனுப்பி ஊரடங்கு முடியும் வரை மாடுகளை பாதுகாக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்