மணல் கடத்திய 2 பேர் கைது

சாக்கோட்டை போலீஸ் சரகம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-28 17:58 GMT
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ்சரகம் செங்காத்தங்குடி கண்மாய் அருகே ஆற்று மணலை கடத்துவதாக கிடைத்த தகவலையொட்டி தனிப்பிரிவு போலீஸ் கருணாகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது ஒரு டிராக்டரில் ஆற்று மணலை 2 பேர் கடத்தி செல்வது தெரியவந்தது.உடனடியாக டிராக்டர், 3 யூனிட் மணல் மற்றும் அதனை கடத்திய இருவரையும் பிடித்து சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் மணலை கடத்தியவர்கள் ஆலமங்கலத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 56) காளிமுத்து (70) என தெரியவந்தது இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மணலும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்