காளையார்கோவில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்கவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கொேரானா கால நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.7,500-ஐ வழங்கிடவும் மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் அமைப்பு ஆகியவை சார்பில் காளையார்கோவில் பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் கோபால், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் திருச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் தொத்தப்பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், நகர செயலாளர் வெற்றி விஜயன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பாவல் மற்றும் பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வீரபாண்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்து ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் முருகன், சந்திரன், மற்றும் கங்கைசேகரன், முத்துபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மதி, சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்