திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

Update: 2021-06-28 17:28 GMT
திருமயம், ஜூன்.29-
திருமயம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார். அதன்பின் விஜய் அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் விஜய் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது விஜய் மற்றும்  அவரது குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்