கூத்தாநல்லூரில் கொரோனா தடுப்பு ஆற்றல் கண்டறியும் பரிசோதனை

கொரோனா தடுப்பு ஆற்றல் கண்டறியும் பரிசோதனை நடந்தது.

Update: 2021-06-28 16:42 GMT
கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் மக்களிடையே, கொரோனா தடுப்பு ஆற்றல் எவ்வாறு உள்ளது? என கண்டறியும் ‘ஆன்டிபாடி’  பரிசோதனை நடந்தது. டாக்டர் யுவராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டனர். கூத்தாநல்லூர், மேல்கொண்டாழி தீன் நகரில் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் 30 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையின் போது கூத்தாநல்லூர் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், மேற்பார்வையாளர் வாசுதேவன், அண்ணாமலை மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்