இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

எஸ்.புதூர் அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-28 16:40 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே புல்லாம்பட்டி கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சின்னான் மகன் ராவுத்தனுக்கும், கருப்பன் மகன் குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தில் ஒருவர் இறந்து உள்ளார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு சென்ற போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார், சந்தோஷ், சந்துரு, கவுனார்பட்டியைச் சேர்ந்த அஜீத், புல்லாம்பட்டியைச் சேர்ந்த ராவுத்தன், அசோக், சக்திவேல், பாலமுத்தன் ஆகிய 8 பேர் மீது புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்