கோவில்பட்டியில் பெண்ணை தாக்கி நகை பறித்த தொழிலாளி கைது
கோவில்பட்டியில் பெண்ணை தாக்கி நகை பறித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கழுகுமலை அண்ணா புது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 55). கோவில்பட்டி நடராஜபுரத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்த இவர், அதே பகுதியில் உள்ள மகாராஜா சுடலை கோவிலுக்கு நடந்து சென்றபோது, மர்மநபர் ஒருவர் அவரை வழிமறித்து, தாக்கி கைப்பையை பறித்துச் சென்றார். அதில் 2 பவுன் தங்க நகை, செல்போன், ரூ.3,000 மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை இருந்தது.
இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகப்பாண்டி (45), காளியம்மாளை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, நகை-பணத்தை மீட்டனர்.