ஒரே நாளில் 777 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கோத்தகிரியில் ஒரே நாளில் 777 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.;

Update: 2021-06-28 14:46 GMT
கோத்தகிரி,

கோத்தகிரியில் ஒரே நாளில் 777 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதி மற்றும் பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தும் பணி நடைபெற்றது. 

நீண்ட வரிசை

இதையொட்டி காலை 6 மணி முதல் ஏராளமான பொதுமக்கள்  வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை உரிய சமூக இடைவெளியுடன் நிற்க வைக்க ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

பின்னர் கோத்தகிரி அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை டாக்டர்கள் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் 431 பேருக்கும், பஸ் நிலைய பகுதியில் உள்ள பள்ளியில் 346 பேருக்கும் என மொத்தம் 777 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்