ஆத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆத்தூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றபோது ஆத்தூர் அருகே கீரனூர் விலக்கில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த கந்தசாமி மகன் பாலகிருஷ்ணன்(வயது27) என்றும், அந்த பகுதியில் அவர் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.