பட்டா கத்தியுடன் பொதுமக்களுக்கு மிரட்டல்; 4 வாலிபர்கள் சிக்கினர்

திருவள்ளூரை அடுத்த தொழுவூர் பகுதியில் வந்த போது, சாலையோரத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதி கவிழ்ந்தது.;

Update: 2021-06-28 04:46 GMT
திருவள்ளூர், 

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் நோக்கி 2 ஆட்டோவில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த ஆட்டோ திருவள்ளூரை அடுத்த தொழுவூர் பகுதியில் வந்த போது, சாலையோரத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதி கவிழ்ந்தது. அதனையறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து கேட்டபோது, ஆட்டோவில் இருந்த 4 பேரும் பட்டாக்கத்தியை எடுத்து விசாரிக்க வந்தவர்களை விரட்டியுள்ளனர்.

இந்தநிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அந்த 4 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்யராஜ் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட 4 பேரும் திருவள்ளூரை அடுத்த வெள்ள குளத்தை சேர்ந்த செல்வம் (வயது 29), ஐயப்பன் (20), பூந்தமல்லி கரையான்சாவடியை சேர்ந்த புவனேஸ் (28), விக்னேஷ் (27) என தெரியவந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்