மகள் உறவுமுறை கொண்ட இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த தொழிலாளி - தப்பி சென்ற போது விபத்தில் சிக்கியதால் போலீசாரிடம் பிடிபட்டார்
பண்ட்வால் அருகே மகள் உறவுமுறை கொண்ட இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த தொழிலாளி தப்பி சென்ற போது விபத்தில் சிக்கியதால் போலீசாரிடம் பிடிபட்டார்.
மங்களூரு:
மிரட்டி கற்பழிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சஜிபமுட்னூர் அருகே அல்லாடி கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம். தொழிலாளி. இவர் அப்பகுதியை சே்ாந்த மகள் உறவுமுறை கொண்ட இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
புருஷோத்தமின் பாலியல் தொல்லை அதிகமானதால் அந்த இளம்பெண், புருஷோத்தம் மீது பண்ட்வால் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
கார் விபத்தில் சிக்கியது
இதுபற்றி அறிந்த புருஷோத்தம் பண்ட்வாலில் இருந்து பெங்களூருவுக்கு காரில் தப்பி சென்றார். பி.சி.ரோடு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் புருஷோத்தம் காயம் அடைந்தார். இதுபற்றி அறிந்த பண்ட்வால் டவுன் போலீசார் புருஷோத்தமை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அப்போது புருஷோத்தம் மீது தான் இளம்பெண் புகார் கொடுத்தது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.