விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது
நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே விவசாயி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி வெட்டிக்கொலை
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 42). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் அந்தப்பகுதி குளக்கரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாபு குடும்பத்தினர் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.
6 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தன் (19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. அதாவது பாபுவின் குத்தகை குளத்தில், கந்தன் தரப்பினர் மீன் பிடித்துள்ளனர். இதை பாபு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தன் தரப்பினர் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று கந்தன் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் (19) மற்றும் 18 வயது மதிக்கத்தக்க 4 பேர் உள்பட 6 பேரை கைது செய்தனர்.