மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 4 பேர் கைது
மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணமேல்குடி
மணமேல்குடி-கள்ளக்குறிச்சி வெள்ளாற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் சிலர் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த தளிக்கோட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன், முருகானந்தம், மணிகண்டன், பழனியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.