புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுக்கோட்டை
தண்டவாள பராமரிப்பு
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகளில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சரக்கு ரெயில்கள் நிறுத்த தனியாக தண்டவாள பாதை உள்ளது. தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிற நிலையில் பயணிகள் ரெயில் நிலையத்திற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். திருச்சி- காரைக்குடி இடையே ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகளின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்தநிலையில் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் ஸீலிப்பர் கட்டைகள், ஜல்லிக் கற்களை சரி செய்தல், மேலும் தண்டவாளத்தில் பாயிண்ட் பகுதிகளில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
எந்திரம்
இந்த தண்டவாள பராமரிப்பு பணிகள் நவீன எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில்வே ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பணிகள் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் எந்திரத்தால் பராமரிக்கப்படுகின்றன. ரெயில் தண்டவாளத்தின் அளவை சீராக வைத்து சரி செய்கிறது.
இந்த பணிகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இரு மார்க்க தண்டவாள பாதையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.