சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தூர் பைபாஸ் ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா அருகில் வைத்து கஞ்சா விற்ற சாத்தூர் மேலக்காந்தி நகரை சேர்ந்த மணி (வயது 48) என்பவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.