மூதாட்டியிடம் நகை பறிப்பு

சிவகாசியில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.

Update: 2021-06-27 19:16 GMT
சிவகாசி, 
சிவகாசி சின்னதம்பி நகரில் வசித்து வருபவர் சிவகாமியம்மாள் (வயது 71). இவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சிவகாமியம்மாளிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவகாமியம்மாள் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்