ஊத்துக்குளி போலீசார் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி

ஊத்துக்குளி போலீசார் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி

Update: 2021-06-27 19:08 GMT
ஊத்துக்குளி
கொரோனா 2-ம் அலை பரவலில் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்ட நிலையில் பலர் வேலை இழந்து குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று ஊத்துக்குளி போலீசார் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. ஊத்துக்குளி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120 மாற்றுத்திறனாளிகளுக்கு காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் கலந்துகொண்டு அரிசியை வழங்கினார். இதில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமதி, பாரதிராஜா மற்றும் போலீசார் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்