வாலிபரை கத்தியால் காயப்படுத்திய பெட்டிக்கடைக்காரர் கைது

வாலிபரை கத்தியால் காயப்படுத்திய பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-27 18:54 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அப்போது அதே ஊரை சேர்ந்த மணிவேல் என்பவரது மகன் கவிநாத் (21) என்பவர் பெட்டிக்கடைக்கு வந்து பொருள்கள் கேட்டுள்ளார். அதற்கு சிவகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உண்டானது. இதில், ஆத்திரமடைந்த சிவகுமார் கடையில் இருந்த கத்தியை எடுத்து கவிநாத்தை காயப்படுத்தினார். இதையடுத்து கவிநாத் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் சிவகுமார் மீது வழக்குப்பதிந்து, சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்