பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்
பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது;
க. பரமத்தி
கரூர் மாவட்ட பூசாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் க.பரமத்தியில் உள்ள நாகத்தா கோவிலில் 50 பூசாரிகள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தென்னிலை மேல்பாகம் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பூசாரிகளுக்கு முதல் கட்டமாக தலா 5 கிலோ அரிசி வழங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.கே.சதீஸ் கண்ணன், மாநில தலைவர் ராஜேந்திரன், மாநில துணை தலைவர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கரூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.