விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2021-06-27 18:47 GMT
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள காகிதபுரம் குடியிருப்பில் வல்லபை விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து மலர் மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு  அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது.
இதேபோல் நொய்யல் அருகே முத்தனூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் செய்திகள்