உடுமலையில் மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

உடுமலையில் மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

Update: 2021-06-27 18:43 GMT
உடுமலை, 
உடுமலையில் மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகள்
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் மற்றும் உயரழுத்த, தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் அந்தந்த துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். 
அவ்வாறு மின் வினியோகம் நிறுத்தப்படும் நேரங்களில் அந்தந்த பகுதிகளில் மின்கம்பங்களுக்கிடையே உள்ள மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்படும்.
வெட்டி அகற்றம்
அதன்படி உடுமலை நகரில் நேற்று  மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்த வ.உ.சி.வீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பிகளில் உரசிக்கொண்டிருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. உடுமலை வ.உ.சி.வீதியில் சர்தார் வீதி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியமரத்தின் கிளை அதற்கு எதிர்புறம் உள்ள மின் கம்பியில் உரசிக்கொண்டிருந்தது.
அதனால் அந்த மின் கம்பிபகுதிக்கு செல்லும் மரத்தின் கிளை முழுவதும் ரம்பத்தால் அறுத்தும், அரிவாளால் வெட்டியும் அகற்றப்பட்டது. இதில் அந்த மரத்தின் சில கிளைகளின் ஆரம்பபகுதி சுமார் ஒரு அடி பருமன்  இருந்தது. 
வெட்டி அகற்றப்பட்டமரக்கிளைகள் ரம்பம் மூலம் துண்டு துண்டாக அறுத்து சேகரித்து கொண்டுசெல்லப்பட்டன.
==============

மேலும் செய்திகள்