குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய்

குடியாத்தத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய்;

Update: 2021-06-27 18:41 GMT
குடியாத்தம்

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஒரு லிட்டர் ெபட்ரோல் விலை நேற்று முன்தினம் ரூ.100.68 பைசாவாகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.94.66 பைசவாகவும் இருந்தது. ஆனால் நேற்று சற்று உயர்ந்து பெட்ரோல் ரூ.100.99 பைசாவுக்கும், டீசல் ரூ.94.90 பைசாவுக்கும் விற்பனையானது. 

இந்த விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்