உடுமலை பகுதியில் சின்ன வெங்காயம் விளைந்து கிடப்பதால் அறுவடைக்குதயார் நிலையில் உள்ளது.

உடுமலை பகுதியில் சின்ன வெங்காயம் விளைந்து கிடப்பதால் அறுவடைக்குதயார் நிலையில் உள்ளது.

Update: 2021-06-27 18:39 GMT
தளி
உடுமலை பகுதியில் சின்ன வெங்காயம் விளைந்து கிடப்பதால் அறுவடைக்குதயார் நிலையில் உள்ளது.  
சின்னவெங்காயம் சாகுபடி
உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகிய நீராதாரங்களை அடிப்படையாக கொண்டு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை, வாழை, காய்கறிகள், தானியங்கள், கீரைவகைகள் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. 
அவற்றில் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் பொருளான சின்ன வெங்காயம் முக்கியத்துவம் பெறுகிறது. வெப்ப மண்டல பயிரான இதை விதைகள் மூலமாக நாற்றுகளை உற்பத்தி செய்தும், நேரடியாக வெங்காயத்தையும் நடவு செய்கின்றனர். நாற்றுக்கள் மூலம் நடவு செய்தால் 90 நாட்களிலும், வெங்காயத்தை நடவு செய்தால் 65 நாட்களிலும் அறுவடை செய்யப்படுகிறது.
சீரான விலை
இதில் முழுமையான விளைச்சல் அப்போதைய பருவநிலையையும், லாபம் ஈட்டுவது அன்றைய விலையை பொருத்து அமையும். ஒருபுறம் நடவு மறுபுறம் பராமரிப்பு, அறுவடை என உடுமலை பகுதியில் தொடர்ந்து சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சின்ன வெங்காய சாகுபடியில்  விவசாயிகள் ஒவ்வொரு பட்டமாக நடவு செய்து வருகின்றனர். அந்த வகையில் 2 மாதத்துக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சில பகுதியில் சின்ன வெங்காயம் விளைந்து தயார் நிலையில் உள்ளது. 
இதில் விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சின்னவெங்காயத்திற்கு சீரான அளவில் விலை கிடைத்து வருகிறது. நாட்டு வெங்காயம் தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் ஹைப்பிரட் வெங்காயம் கிலோ ரூ.40 முதல் 50 வரையிலும் விடை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு  லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்