திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசு பஸ்கள் இயக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசு பஸ்கள் இயக்கம்

Update: 2021-06-27 18:21 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு போக்குவரத்துக் கழக துணைப் பொது மேலாளர் (ஆபரேஷன்) ஜி.கலைச்செல்வன் கூறியதாவது:-

தமிழக அரசு கொரோனா தடுப்பு ஊரடங்கில் சில கட்டுப்பாடு்களை அறிவித்துள்ளதை அடுத்து இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல அரசு பஸ்கள் இயக்கப்படும். திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பஸ்கள், வேலூர், சென்னை, தாம்பரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் 50 சதவீத பயணிகளுடன் 60 பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோல் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் கந்திலி, குரிசிலாப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 42 டவுன் பஸ்கள் என மொத்தம் 100 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வருகையை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்துப் பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் அரசு உத்தரவை மதித்து பஸ்களில் பயணம் செய்ய வேண்டும். குப்பம், சித்தூர், திருப்பதி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து இரு மாநில அரசுகளின் அறிவிப்புக்குப் பின்னர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்