கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

திருவாரூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டார்.;

Update:2021-06-27 23:41 IST
திருவாரூர்:
திருவாரூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊா்வலம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டார். 
சைக்கிள் ஊர்வலம்
திருவாரூரில் போலீஸ்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி சைக்கிளில் ஊர்வலமாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சைக்கிள் ஊர்வலம், தஞ்சை சாலை, துர்க்காலயா ரோடு, மருதப்பட்டினம், நெய்விளக்கு தோப்பு, கடைவீதி, பழைய பஸ் நிலையம் வழியாக அழகிரி காலனியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் அதிரடிப்படை போலீசார் கலந்து கொண்டனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:-
விழிப்புணர்வு
கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளில் அரசின் கட்டுபாட்டு நடைமுறைகளை செயல்படுத்துவதில் போலீசார் பங்கு முக்கியம்.   இப்பணியில் இரவு, பகலாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் ஊர்வலம் நடைபெற்று உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் நிச்சயம் கொரோனா நோய் தொற்றை தடுக்க முடியும். அதற்கு அரசின் வழிகாட்டுதலை அனைவரும் கடைபிடித்து உரிய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் கல்வியின் அவசியம், நோயற்ற வாழ்கை முறைகள் குறித்து விளக்கி சிறுவர்களுக்கு பரிசு வழங்கினர்.

மேலும் செய்திகள்