கல்குவாரி வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு; 2 பேர் கைது

கல்குவாரி வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-27 17:46 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த தொண்டமாந்துறையில் உள்ள கல்குவாரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்(வயது 20), குப்புசாமி (29) ஆகிய 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதில் குப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதி இல்லாமல் கல்குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்த குவாரி மேலாளர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ்(27), கல் உடைக்க வெடிமருந்து சப்ளை செய்த விஜயபுரத்தை சேர்ந்த செல்வகுமார் (30) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்