நல்லம்பள்ளி அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நல்லம்பள்ளி அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-06-27 17:24 GMT
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே உள்ள தடங்கம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 43). டாஸ்மாக் ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான குன்செட்டிஅள்ளி கிராமத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்ததது. இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்