குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை

குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-06-27 17:23 GMT
ஊட்டி

ஊட்டி ஆர்.கே.புரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவரது மனைவி ருக்குமணி (வயது 52). கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. 

அந்த பிரச்சினை முற்றவே ருக்குமணி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ருக்குமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்