விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-27 17:22 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவிவை சேர்ந்த வைத்திலிங்கத்தின் மகன் வடிவேல்(வயது 35). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் கோடாலிகருப்பூர் வக்காரமாரி சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை சோழமாதேவி கீழத்தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் மணிகண்டன்(26) வழிமறித்து, சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வடிவேல் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்