கல்வராயன்மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு;
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை ஈச்சங்காடு கிராமம் ஓடையில் அண்ணாதுரை மகன் உத்திர குமார் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ஈச்சங்காடு கிராம ஓடையில் அதிடி சோதனை நடத்தினர். அப்போது அங்கே புதர்போன்ற மறைவான இடத்தில் 10 பேரல்களில் 1,500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்த போலீார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக உத்திரகுமார் மீது கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.