மயிலாடுதுறையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

மயிலாடுதுறையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது.;

Update: 2021-06-27 16:48 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை சாரதட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது29). இவர், மயிலாடுதுறையில் ஒரு பகுதியை சேர்ந்த 29 வயது பெண்ணை கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. அப்போது மோகன்ராஜ் அந்த பெண்ைண திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இந்தநிலையில் சாதியை காரணமாக கூறி அந்த பெண்ணை மோகன்ராஜ் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்