தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது45). கூலித்தொழிலாளி. ராமநாதன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனைவி ராஜேசுவரி கோபித்து கொண்டு மகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டராம். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராமநாதன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ராஜேசுவரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.