பனைக்குளம்,
தேவிபட்டிணம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி தலைவர் ஹமீதியா ராணி ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து தேவிபட்டிணம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் சுரேந்தர் ஆலோசனையின்படி பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி தலைவர் பவுசியாபானு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மருத்துவர் தாமோதரன், சுகாதார ஆய்வாளர் நாகேந் திரன் மற்றும் செவிலியர்கள் முகாமில் கலந்துகொண்டு பணிகளை மேற்கொண்டனர்.