தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் வீடுபுகுந்து போலீஸ் ஏட்டுவை தாக்கிய, மனைவியின் உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2021-06-27 16:12 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் வீடுபுகுந்து போலீஸ் ஏட்டுவை தாக்கிய, மனைவியின் உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீஸ் ஏட்டு
தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வமாரியப்பன் (வயது 45). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். இதனால் இவருக்கும், மனைவியின் உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்
நேற்று முன்தினம் செல்வமாரியப்பன் வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது அங்கு வந்த மனைவியின் உறவினர்கள் 8 பேர் தகராறு செய்து உள்ளனர். இதில் அவருக்கும், மனைவியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள், செல்வமாரியப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு, வீட்டையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்களாம்.
இதில் காயம் அடைந்த செல்வமாரியப்பன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
8 பேர் மீது வழக்கு 
இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் மனைவியின் உறவினர்கள் வேலாயுதம், அருணா, ராமச்சந்திரன், சுந்தரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்