சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு

வத்தலக்குண்டு பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-27 16:00 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் நிலையம், காளியம்மன் கோவில் பகுதி, சந்தைப்பேட்டை பகுதி, கடைவீதி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

அதில் அ.தி.மு.க.வையும், பொதுமக்களையும், கயவர்களிடமிருந்து காப்பாற்ற வாரீர் வாரீர் என்ற வாசகமும், உண்மை தொண்டன் ஞானசேகர், கருப்பையா என்பவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் வத்தலக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்